கோடை காலம் என்றாலே சூரியனின் வெப்பம் அதிகரித்து மனித உடலில் எண்ணற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடை காலங்களில் உடல் உஷ்ணம் அடைந்து அடிக்கடி உடலில் பலவித பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற காலங்களில் நாம் அன்றாடம் உணவு வகைகளில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தி வருவதுடன் இயற்கையான காய்கறிகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் உண்டு வரவேண்டும். அவ்வகையில் உடலின் உஷ்ணத்தை குறைப்பதில் அதிக பங்கு வகிக்கும் நுங்கு எண்ணற்ற பலன்களை தருகிறது. அதனை இந்த பதிவில் அறியலாம்.
நுங்கில் உள்ள சத்துக்கள்:
இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி, ஜிங்க் போன்ற பலவித சத்துகக்ள் நிறைந்து காணப்படுகிறது.
நுங்கின் நன்மைகள்:
- கோடை காலங்களில் தோன்றும் உடல் சூட்டை தணித்து தாகத்திற்கு ஏற்றதாக விளங்குகிறது.
- உடல் உஷ்ணத்தால் ஏற்படும் அம்மை நோய் போன்றவற்றை நெருங்க விடமால் பார்த்து கொள்கிறது.
- வியர்குரு ஏற்பட்டால் நுங்கின் தோலை எடுத்து தொடரந்து தடவி வர வியர்குரு குணமடைந்து உடல் உஷ்ணம் குறையும்.
- உடலில் கனிமசத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைக்கவும் நுங்கு உதவுகிறது.
- வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு அருமருந்தாக காணப்படுகிறது.
- கர்பிணிகளுக்கு ஏற்படும் கோடை கால பிரச்சனைகளை சரிசெய்யவும் செரிமான சக்தி அதிகரிக்கவும் பனை நுங்கு பயனுள்ளதாக இருக்கிறது.
- அந்த்யூசன் என்ற இரசாயணம் நுங்கில் இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வரமால் தடுக்கவும் இது பயன்படுகிறது.
- சுறுசுறுப்புடன் செயல்படவும் இரத்தசோகை இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாகவும் காணப்படுகிறது.
இத்தனை நன்மைகளை அள்ளி தரும் பனை நுங்கினை தினமும் சாப்பிட்டு கோடை காலத்தில் ஏற்படும் பலவித பிரச்சனைகள் வரமால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவோம். தினமும் அதிகப்படியான நீரினை பருகுவதுடன் இது போன்ற இயற்கை அளிக்கும் அருமருந்தான நுங்கை சாப்பிட்டு வருவோம்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.