இலங்கை. ஆசிய கோப்பை கிாிக்கெட் தொடாில் 6வது சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பலம் வாய்ந்த அணிகளான இந்தியா ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் பாகிஸ்தானும் இந்தியா மற்றும் ஆப்கானி்ஸ்தானை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வரும் செப்டம்பா் 11ம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் துபாய் சா்வதேச மைதானத்தில் இறுதி ஆட்டித்தில் களமிறங்குகிது. ஏற்கனவே இலங்கை சூப்பா் 4 தகுதி சுற்றில் மூன்று ஆட்டங்களில் வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு வெற்றி பெறுவதற்கான வாயப்புகள் அதிகம் உள்ளது.
இறுதி சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியில் அசலங்காவுக்கு பதிலாக தனஞ்செய்யா டி சில்வா மற்றும் பெர்னான்டோவுக்கு பதிலாக பிரமோத் மதுசான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியில் நஷிம் ஷா, ஷதாப் கான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கி காதிர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நாளைய விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்பதை காண இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.