மாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

0
18

மாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் குறைந்த காற்றத்தழுத்த காரணத்தினால் புயல் சின்னம் உருவாகி உள்ள நிலையில் அது வலுப்பெற்று மாமல்லபுரத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் இருக்கவும் சென்னை, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் பகுதிகளில் அதி கனமழை வரும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

காற்று அதிகமாக வீசக்கூடிய நிலையில் மக்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலை எதிர்க்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்ததுள்ளது. பல்வேறு விதமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புயலால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கருதப்படும் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு,கடலூர்,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் நிர்மலா சீத்தாராமன்

மழைக் காலங்களில் மக்கள் பொதுவாக வீட்டினுள்ளும் வெளியே செல்லும் பொழுதும் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தலாகிறது.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here