தேசிய திரைப்பட விருது இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்பு

0
9

தேசிய திரைப்பட விருது இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ் திரைப்படங்களில் எந்தெந்த படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஓவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். நாட்டில் உள்ள அனைத்து மொழி படங்களும் இவ்விழாவில் பங்கேற்கும் சிறந்த மற்றும் தகுதியான படத்திற்கு விருதுகள் வழங்கப்படும்.

சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு கலைகளில் சிறப்பாக திரைப்படங்களுக்கு பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

இந்நிலையில், இந்தாணடுக்கான 68 வது தேசிய விருது வழங்கும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சூரியா நடிப்பில் வெளாயன சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய திரைப்பட விருது இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்பு

அதைபோலவே, கபெ ரணசிங்கம் மற்றும்  குணசித்திர் நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய கன்னி மாடம், மற்றும் புதுமுகங்கள் நடித்த காவல் துறை உங்கள் நண்பன் படங்களும் தேசிய விருதிற்கு தமிழில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ் படம் மற்றும் நடிகர்களுக்கு ஏறாலமான விருதுகள் கிடைக்கப் பெற்றது. அதன்படி இவ்வாண்டும் அதிகளவில் தமிழ் திரையுலகிற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்ற சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் படங்களுக்கு விருதுகள் கிடைக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோல் மேலும் பல தமிழ் திரைப்படங்களை மேற்கொள் காட்டி ரசிகர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் இன்றைய தேசிய திரைப்பட விருது அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கும் சிறந்த நடிகர்கான விருதை தனுஷ்ம் பெற்றார். குமாரசாமி இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் அரவானியாக நடித்த விஜய்சேதுபதிக்கும் விருது கிடைத்தது.

விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், கேடி (எ) கருப்பு துரை என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் வழங்கப்பட்டது. இதனால் தான் இந்த முறையும் தமிழ் சினிமாக்களுக்கு விருதுகள் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here