நடிகர் அஜித் குமார் சமீப காலமாக உலமெங்கும் பைக்கில் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றார். தற்போது தனது படப்பிடிப்பு பணிக்காக தாய்லாந்து சென்ற அஜித் அங்கு பைக் ரைடில் அசத்தி வருகின்றார் அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து போஸ்ட் புரோடக்ஷன் வேலைகளை செய்து வருகின்றார் இயக்குனர்.
இந்த திரைப்படம் பெங்கல் பண்டிகையன்று ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் ஓளிப்பரப்படுகின்றது. அதற்கு அடுத்த நாள் 13ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு திரைப்படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் துணிவு திரைப்படத்தினை போனிகபூர் தயாரிக்கிறார். திரையரங்கு வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
விஜய் அஜித் திரைப்படங்கள் 2014ம் ஆண்டு ஜில்லா, வீரம் என இரண்டு படங்களும் பொங்கல் தினத்தின்று வெளியாகி இருவரின் ரசிர்களும் கொண்டாடும் படங்களாக இருந்தது. இந்நிலையில், பல வருடங்கள் கழித்து இருவரின் படங்களும் ஓரே பண்டிக்கைக்கு வெளியாவது ரசிர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், துணிவு படத்தின் டப்பிங் பணிகளை தாயலாந்திலிருந்து வந்த பிறகு நடத்தி முடித்து விடலாம் என படக்குழு தெரிவத்துள்ளனர். துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் தாய்லாந்து முழுவதும் பைக்கில் ஓரு ரவுண்ட் அடிக்க கிளம்பி விட்டார். அந்த பைக் ரைடு பற்றிய புகைப்படங்களில் வெளியாகி மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது.
பைக் ரைடு மீது தீராத காதல் கொண்டுள்ளதால் அஜித் சமீபத்தில் ஐரோப்பா மற்றும் லண்டனுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பைக் ட்ரிப்பும் சென்றிருந்தார். பிறகு இந்திய திரும்பிய அஜித் இமயமலை பகுதிகளுக்கு பைக் ரைடு செய்தார். அங்குள்ள ஹரிதுவார், கேதர்நாத், பத்ரிநாத் போன்ற தலங்களுக்கும் சென்று வந்தார். அப்போது வந்த ரசிகர்களுடன் எடுத்த புகைப்டங்கள் டிரன்டிங்கிலேயே இருந்தது.
ஓரு ரசிகரின் பைக் டையர் பஞ்சர் ஆனதை அறிந்த அஜித் தானே அதை சரி செய்து ரசிகர்களின் ஏகோபித்த அன்பை பெற்றார். தற்போது தாய்லாந்தில் பைக்ரைடு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.