நடிகர் அஜித் குமார் இமயமலையை பைக் ரைடில் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார் அது சார்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைராலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரமாகவும் விஜய்க்கு அடுத்தப்படியாக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் நடிகர் அஜித். எந்த ஓரு பின் புலமும் இல்லாமல் சினிமா துறைக்கு வந்து இன்று மிக பெரும் நட்சத்திரமாக விளங்குபவர். ரசிகர்களால் தல என்றும் ஏகே எனவும் புகழப்படுபவர்.
இவர் பைக் ரைடில் மிக அலாதியானவராக இருப்பதால் ஓவ்வொரு படத்தின் முடிவிலும் அல்லது ஓய்வு கிடைக்கும் நேரங்களிலும் பைக் பயணங்கள் மேற் மேற்கொள்வது வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இமயமலை பகுதியில் தன் நண்பர்கள் குழுவுடன் பயணம் செய்து வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது ஏகே 61 வது படம் தயாராகி வருகிறது. இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருவது நாம் அறிந்ததே.
இவர் இயக்கத்தில் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய அஜித், தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் இப்படம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜாலியாக அஜித் குமார் இமயமலைப் பகுதியில் பைக் ரைடுக்கு கிளம்பி விட்டார். அதில் அவர் ஓட்டிச் சென்ற பைக்கில் ‘Never Ever Give Up’ என்கிற ஸ்டிக்கரும் இடம்பெற்று உள்ளது. இது விவேகம் படத்தில் அவர் பேசிய பஞ்ச் டயலாக் ஆகும். சிவா இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.