நடிகர் அஜித் குமார் லடாக்கிற்கு பைக் ரைடில் சென்னையிலிருந்து லடாக் வரை பயணம் செய்து வந்து கொண்டுள்ளார். இதன் ஓரு பகுதியாக அங்குள்ள சில இடங்களுக்கு சென்று பார்க்க ஹெலிகாப்படரில் பயணத்தை மேற்கொண்டு உள்ளார் இதை அவரது ரசிகர்கள் டிரண்டு செய்து வருகின்றனர்.
நடிகர் அஜித் திரைவுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர். ஓவ்வொரு முறை படப்பிடிப்பின் போதும் ஓய்வு நேரங்களில் தனது பைக்கில் ரைடு செய்வார். இவர் அது போல சென்னையிலிருந்து லடாக் வரை பைக்கில் ரைடு செய்து வருகிறார். இவருடன் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பயணத்தை மேற்கொண்டு வந்தார். இவர்களின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் பெரும் அளவில் பார்க்கப்பட்டு லைக்குகைளை அள்ளி வரும்.
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏ.கே.61 திரைப்படம் தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்திற்காக பிரம்மாண்டமான வங்கி செட் அமைத்து ஐதராபாத்தில் பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த விரைவில் பேங்காக் செல்ல உள்ளது. அங்கு மாஸான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அங்கு 35 நாட்கள் தங்கி படப்பிடிப்பை நடத்த உள்ளாராம் அஜித்.
பேங்காக் செல்வதற்கு முன்னர் நடிகர் ஏகே, தற்போது தனது நண்பர்களுடன் பைக் ரைடிங் சென்றுள்ளார். இதற்காக கடந்த மாத இறுதியில் சென்னையில் இருந்து லடாக் சென்ற அஜித் அங்கிருந்து பைக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த இரு வாரங்களாக அப்பகுதியில் பைக் ரைடிங் செய்து வருகிறார் அஜித். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் இந்த பைக் ட்ரிப்பில் இணைந்து சில நாட்கள் சுற்றினார்.
இந்நிலையில், தற்போது மணாலியில் தங்கியுள்ள நடிகர் ஏகே, அங்கு சுற்றிப் பார்ப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது எடுத்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் நடிகர் அஜித்தின் நண்பர் சுப்ரஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் பாராட்டி வருகின்றனர்.