நடிகரும் இயக்குனருமான தமிழ் மலையாளத்தில் வலம் வந்தவர் பிரதாப் போத்தன் இன்று காலமானார் அவருக்கு வயது 70
தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகர் அவர் நடித்த பாடல் இன்றும் மிக பிரபலம் என் இனிய பொன் நிலாவே என்ற பாடலில் வயலின் வாசித்து கொண்டே பாடுவார் அது அனைவரின் கண் முன்னும் இன்றும் வந்து செல்கிறது.
இவர் தமிழ் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல படங்களில் நடத்தும் இயக்குனராக பணியாற்றியும் உள்ளார். வயது மூப்பினால் இன்று அவர் திரையுலகத்தை விட்டும் மண்ணை விட்டும் சென்றார்.

மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன் நடித்த பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் , மூடு பனி போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டன. இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக பிரதாப் போத்தன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதாப் போத்தனின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகச் சிறந்த சினிமா படைப்பாளியை இழந்து விட்டதாக சினிமா பிரபலங்கள் வருத்தத்துடன் இறப்பு செய்தியை பதிவிட்டு வருகின்றனர். கடந்தாண்டு வெளியான கமலி from நடுக்காவேரி படத்தில் பிரதாப் போத்தன் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரை உலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.