தளபதி 67 நடிகர் விஜய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஷாலை நடிக்க வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தற்போது பிசியாக தெலுங்கு இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், இப்படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் சிறிது நாட்களில் முடிந்து விடும் தருவாயில் உள்ளது. எனவே, 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே பொங்கல் ரீலிசாக நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. கிட்டத்தட்ட இந்த இரு நடிகர்களின் படங்களும் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஓன்றாக பொங்கல் ரீலிசில் சந்திக்கிறது. இதனால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: ‘‘Get Well Soon’ என்று சமந்தாவின் ரசிகர்கள் நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்

வாரிசு படத்தின் பணிகள் முடிந்தவுடன் விஜய் தனது 67 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மாஸ்டர் படம் பெரிய அளவில் ஹூட் அடித்து வசூலிலும் சாதனை புரிந்தது. அதை போல லோகேஷ் இயக்கத்தில் வெளியான உலக நாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹூட் ஆகி 100 நாட்களை கடந்து வெற்றி பெற்று வருகிறது.
தற்போது, விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஷாலை ஈடுப்படுத்த படக்குழு விருப்பம் தெரிவித்துள்ளது. இப்படத்தில் மலையாள நடிகர்களான நிவின் பாலி மற்றும் ப்ரித்திவி ராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்த நிலையில் எது உண்மை என தெரியவில்லை. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலைக் கொண்டு தான் தீர்மானிக்க முடியும்.
இந்நிலையில், வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது ‘வாரிசு’ படம், இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்து நடிக்க உடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இது போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.