யசோதா படத்தில் சமந்தா முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

0
4

யசோதா படத்தில் நடிகை சமந்தா முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் தற்போது குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யசோதா படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு இன்னும் சில தினங்களில் ரீலிசாக காத்திருக்கின்றது. இப்படத்தில் கர்ப்பிணியாக சமந்தா வயிற்றில் குழந்தையுடன் ஆக்‌ஷன் ஹீரோயினாக வலம் வருகிறார். பார்த்திபன் நடிப்பில் வெளியான அம்புலி திரைப்படத்தை இயக்கிய ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோர் இணைந்து யசோதா என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகின்றனர்.

யசோதா படத்தில் சமந்தா முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இந்த நடிகை சமந்தாவின் கரியரில் புதிய வடிவத்தையும் மாற்றத்தையும் தர போகிறது என திரைப்பட ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் பான் இந்தியா படமாக திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் 9ஆம் தேதியான இன்று வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்மூலம் நடிகை சமந்தா இப்படத்தின் கர்ப்பிணிப்பெண்ணாக நடித்துள்ளது தெரிகிறது. கர்ப்பமாக இருக்கும் போதே தன் வயிற்றில் வளரும் பிள்ளையை காப்பாற்ற ஆக்‌ஷன் ஹீரோயினாக அவர் அவதாரம் எடுக்கும்படியான காட்சிகள் அந்த டீசரில் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here