2014க்கு பிறகு விஜய் அஜித் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
2014ம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஐய் நடிப்பில் ஜில்லா திரைப்படம் வெளியாகி மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் மோகன்லால், காஜல் ஆகர்வால், பூர்ணிமா பாக்கியராஜ், சூரி என பல்வேறு நடிகர்கள் நடித்தனர். இப்படம் அந்த வருடத்தில் நல்ல வசூல் செய்து விஐய் ரசிகர்களின் ஆதரவை பெற்றது.
அதே ஆண்டு பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படம் வெளியாகி அதுவும் சிறப்பான வெற்றியை ரசிகர்களுக்கு தந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித், தமன்னா, சந்தானம் என பலர் நடித்தனர். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இப்படமும் மிக பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்களுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற உள்ள நிலையில் இப்படமும் வருகின்ற பொங்களுக்கு வெளியாகும் என படக்குழு அறிவிக்கவுள்ளதாக தகவல் தெரிகின்றது.

இதனால் இந்த இரண்டு படங்களின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார்.
இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.
அதன் பின் சென்னை திரும்பி அவர், மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார். அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் தாய்லாந்து நாட்டில் நிறைவடைகிறது. பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார். அதனால் படத்தின் இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடிக்கவும் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.