23 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை வென்று இந்திய மகளிர் அணி சாதனை

0
3

இந்திய மகளிர் அணி:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்களை கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

கேண்டர்பரியில் நடந்த 2 வது ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பந்து வீசிய 5 வீராங்கனைகளும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 334 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் 8 பேர் மாறி மாறி பந்து வீச திணறிய இங்கிலாந்தின் ஆட்டம் 44.2 ஓவருக்கு 245 ரன்களில் முடிவுக்கு வந்தது. அதனால் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் வியட் 65, கேப்டன் ஆமி, ஆலிஸ் ஆகியோர் தலா 39 ரன் எடுத்தனர்.

indian women cricket team

இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 4, ஹேமா தயாளன் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இங்கிலாந்தில் 1999 ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சாதனை படைத்துள்ளது. இந்த 2 அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் நாளை லண்டனில் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here