பத்து தல படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் நடிகர் சிம்பு ஹூட் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைய உள்ளார். முதன் முறையாக இவர்களின் கூட்டணி இணைவதால் ரசிகர்கள் உற்சாகம்.
நடிகர் சிம்பு சினிமா திரையுலகின் சிறுவனாக இருந்த பொழுதிலிருந்தே நடித்து வருகிறார். சிறுவயதில் இவர் அடிக்கும் ரைமிங் டைலாக்குகள் மிக பிரபலம். தற்போதும் முன்னணி நடிகராக தோன்றி நடித்து வருகிறார். தொடர்ந்து ஹூட் படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டவுடன் இப்படம் வெளியாகி மிகப் பெரும் வெற்றியை தந்தது.
அதற்கடுத்தது பிரபலமான இயக்குனரான கௌதம் வாசுதேவ மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தை கொடுத்து அதில் ஓரு கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கைத்தட்ட வைத்திருப்பார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் நல்ல சாதனை நிகழ்த்தியது. இதனை கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் நடிகர் சிம்புக்கு 1 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்தது.

இயக்குனருக்கு 3 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பில்டு வண்டியை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் சிம்பு அடுத்த படமான பத்து தல படத்தில் நடித்து வந்தார் இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில், அடுத்த படத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது.
பத்து தல படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சூர்யாவின் சில்லுனு ஒரு காதல், ஆரி நடித்த நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி உள்ளார். முஃப்டி என்கிற கன்னட படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
இதையும் படியுங்கள்: சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட் ரசிகர்கள் கொண்டாட்டம்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. ஷூட்டிங் நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு. அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.