ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இந்தியில் மாணிக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்குகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் தொடர்ந்து வெளியாக காத்திருக்கின்றது.
பர்ஹானா, சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. இதனை தொடர்ந்து நடிகை ஐஸ்ர்யா இந்தியில் மாணிக் என்ற படத்தின் மூலம் மீண்டும் களம் காண்கிறார். இப்படம் சைக்காலாஜிக்கல் த்ரில்லர் நிறைந்த கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இப்படத்தை இதற்கு முன் கதாசிரியராக இருந்த சாம்ராட் சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் இவர் அறிமுக இயக்குனராக களம் காண்கிறார். இந்திய ரசிகர்களை கவர்ந்த சைக்காலாஜிக்கல் த்ரில்லர் அனுபவ கதைகளை அனுபவமாக கொண்டு இயக்கப்படுகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக படக்குழு தெரிவிக்கிறது.

காக்கா முட்டை படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று சினிமா துறையில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஐஸ்ர்யா என்றால் மிகையாகாது. இவர் நடித்த கனா, திட்டம் இரண்டு, வடசென்னை போன்ற படங்களில் நல்ல நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். பல விருதுகளை சொந்தமாக்கியவர்.
இந்தியில் டாடி என்ற படத்தில் நடித்து விருது பெற்றவர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் மற்றும் நட்மெக் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ‘மாணிக்’ திரைப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படப்பிடிப்பு இம்மாத இறுதியிலிருந்து தொடங்குகிறது. இதை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Super thrilled and honoured to be a part of the Tamil-Hindi bi-lingual#Manik, Directed by #SamratChakraborty sir, Looking forward to this one! @NutmegProd @EndemolShineIND @tvaroon #Abhishekramisetty #PruthvirajGK @narentnb @GB_1904 #LiyaVerghese @gobeatroute @proyuvraaj pic.twitter.com/MDczoiP3nz
— aishwarya rajesh (@aishu_dil) November 3, 2022
இது போன்ற பல தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.