ஏகே 60 ல் வலிமை இரண்டாண்டு இடைவெளியில் வெளியிட பட்டாலும் உலகமெங்கும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்து வெற்றி தந்தது. வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத்துடன் இணைந்துள்ளார் அஜித்.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அதே டீமுடன் அஜித் கைகோர்த்த படம் தான் வலிமை. அஜித் காவல் அதிகாரியாக நடித்திருந்தார் இந்த படத்தில். அஜித்துடன் போலீஸ் அதிகாரியாகவும் காலா பட நடிகை ஹூமா குரேஷியும் இவர்களுடன் குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏகே 61 ஐ தொடர்ந்து ஏகே 62, ஏகே 63, 64 என பிசியான அஜித்
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி வெளியான இந்த படம் முதல் மூன்று நாட்களில் ப்ரீ புக்கிங் மூலம் சுமார் 100 கோடியை வசூலித்தது. அதோடு உலகம் முழுவதும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் கடந்த மார்ச் 25-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகி 500 + ஸ்ட்ரீமிங்கை பெற்றதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
இதற்கிடையில் மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம் லைகா ப்ரொடக்ஷன்ஸ் ஏகே 62 படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
தற்போது லேட்டஸ்ட் தகவலாக ஏகே 63 படத்தின் அறிவிப்பும் அஜித் பிறந்த நாளான மே 1 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாம். அஜித்தின் 63 வது படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது கோகுலம் சினிமாஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்கள் உருவாகி இருந்தது. இதையடுத்து 5 வது முறையாக இந்த கூட்டணி அமைய உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து அஜித் 64-ம் ரெடியாகவுள்ளது. இதற்காக டைரக்டர் ஸ்ரீ கணேஷிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளாராம் அஜித். இந்த கதையில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சுதா கொங்கரா மற்றும் கேஜிஎஃப் படங்களை இயக்கிய ஹம்பாலே ஃபிலிம்ஸ் இணையும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.