திருச்சியில் நடைபெற்ற 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் 4 தங்கம், 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதோடு அல்லாமல் தனக்கு பிடித்த வேலைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் சொல்லும் டயலக் தான் ஞாபகம் வருகிறது. ‘ஓவ்வொரு நிமிஷமும் ஓவ்வொரு நொடியும் என் வாழ்க்கையில நானா செதுக்கியது’ என்று சொல்வது போல் திரையிலும் நிஜ வாழ்விலும் நடந்து கொள்கிறார்.
நடிகர் அஜித் தனக்குள்ள இருக்கும் ஆர்வத்தையும் தகுதியையும் பயன்படுத்தி தன்னை உயர்த்தி வருகிறார். திரையுலகில் ஏராலாமான ரசிகர் பட்டாளங்களை பெற்றுள்ள அஜித். தற்போது தான் செய்யும் ஓவ்வொரு நிகழ்வுகளின் மூலமும் ரசிகர்களின் பேராதரவை பெற்றவராக திகழ்ந்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு இடைவெளியிலும் பைக்குடன் பல நாடுகளுக்கு சுற்றி திரிந்து வந்தார். கடந்த வருடம் இந்தியா முழுவதும் உயர்ரக பைக்கில் சுற்றி திரிந்தார் என்பது பலரும் அறிந்ததே.
இந்நிலையில், திருச்சி கே கே நகரில் ரைப்பில் கிளப்பில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு ரசி்ர்களை வியப்பில் ஆழ்த்தினார். ரசிகர்கள் அவரை காண வெகுவாக கவிந்தனர். காவல் துறையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. ஏனெனில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அஜித்தை காண திரண்டிருந்தனர்.
இதை அறிந்த அஜித் ரசிகர்களின் அன்பை பெற அக்கட்டிடத்தின் மாடியில் சென்று ரசிகர்களுக்கு கை அசைத்து ஆராவாரம் செய்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்னைக்கு திரும்பினார்.
இப்போட்டியில் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 24ம் தேதி தொடங்கிய இப்போட்டி 31ம் தேதி முடிவடைகிறது. நடிகர் அஜித் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர்,50 மீட்டர் என மூன்று பிஸ்டலில் இலக்கை நோக்கி சுட்டார்.
நடிகர் அஜித் இதுவரை பங்குபெற்ற போட்டிகளில் 4 தங்கப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கம் என 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் கலந்து கொண்ட போட்டியாளார்கள் 162 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறது.