அமர்நாத் யாத்திரை க்கு செல்வதற்கான முன்பதிவு 11 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் நாடு முழுவதிலிருந்தும் தொடங்கியது. இயற்கையில் உருவான பனி லிங்கத்தை காண இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான யாத்திரிகர்கள் கோடை காலத்தில் வருவார்கள். கொரோனா தொற்று காரணமாக இரண்டாண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு மற்றும் பயணம் இப்போதிலிருந்து தொடங்குகின்றது.
- ஜீன் 30 முதல் ஆகஸ்ட் வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும்.
- முன்பதிவு 11ம் தேதி முதல் தொடங்குகிறது.
- சிவ பக்தர்கள் மகிழ்ச்சி.
தெற்கு காஷ்மீரின் அனந்தநாக்கின் உள்ள பஹல்காமிலிருந்து குகை கோயிலுக்கு 48 கிலோ மீட்டர் மற்றும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்திலிருந்து 14 கி.மீ ஆகிய இரு வழிகளிலும் குறுகிய மற்றும் செங்குத்தான பாதையில் பயணம் தொடங்கும். இந்த ஆண்டு யாத்திரீகர்களின் நலன் கருதி வழியில் அவர்களின் நடமாட்டத்தை கண்கானிக்க ரேடியோ அலைவரிசை (RFID) அடையாள அமைப்பையும் அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஆலயத்தை நிர்வகிக்கும் ஸ்ரீஅமர்நாத்ஜீ ஆலய வாரியம் (SASB) யாத்ரீகர்களின் வசதிக்காக நாடு முழுவதும் 566 கிளைகளை அமைத்துள்ளது.
அனுமதிக்கபடாதவர்கள்
- 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
- 75 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
- ஆறு வாரங்களுக்கு மேல் கர்பமாக இருக்கும் யாரும் அனுமதிக்கபட மாட்டார்கள்.
அமர்நாத் யாத்திரை வழிமுறைகள்
- யாத்திரீகர்கள் எஸ்ஏஏஸ்பி -யால் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இருந்து கட்டாய சுகாதார சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும்.
- நான்கு புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.
- 120 ரூபாய் கட்டணம் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி, YES வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆல் நியமிக்கப்பட்ட வங்கிகளில் கிளைகளிலும் பதவு செய்யலாம்.
“இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று உள்ளூர்வாசியான ரஞ்சீத் சிங் கூறினார். இரண்டு வழிகளிலும் கடந்த காலங்களில் 14 முறை யாத்திரையை மேற்கொண்டதாகவும், எந்தப் பிரச்சனையும் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.