ஆட்குறைப்பு நடவடிக்கை டிவிட்டர், மெட்டாவை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தன்னிடம் பணியாற்றும் 10,000 ஊழியர்களை பணியிலிருந்து விடுவிக்க திட்டம் தீட்டியுள்ளதாக நீயூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
AMAZON நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆன்லைன் மூலம் தொழில் செய்து வரும் ஓரு பெரிய நிறுவனம். பல நாடுகளில் உள்ள பொருட்களை சந்தைப்படுத்தி அதனை ஓருங்குப்படுத்தி நுகர்வோர்களுக்கு வீட்டிற்கே சென்று விற்பனை செய்து வருகின்ற ஓரு மிகப் பெரிய நிறுவனம்.
டிவிட்டர் நிறுவனத்தை உலகின் முதல் பணக்காரராக விளங்கும் எலான் மாஸ்க் கையகப்படுத்தியதை தொடர்ந்து பல முன்னணி பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது. அதில் பல இந்திய பூர்வீகர்களும் பாதிப்படைந்தனர். அதனை தொடர்ந்து கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனத்தையும் வாட்ஸ்அப் நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் நிறுவனர் பல பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்தது.
இதையும் படியுங்கள்: ‘‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது

இந்த நிலையில், அமேசானின் சாதன அமைப்பு, மனிதவள பிரிவு, சில்லறை விற்பனை பிரிவுகளில் ஊழியர்களை நீக்க அமேசான் முடிவு செய்துள்ளது. மூலதன மதிப்பு சரிந்ததால் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது அமேசான் நிறுவனம். பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்த நிலையால், செலவுகளை குறைக்கும் விதமாக இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 31, 2021 நிலவரப்படி அமேசான் நிறுவனத்தில் முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களாகச் சுமார் 1,608,000 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த வாரம் தான் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
அமெரிக்காவில் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சரிந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. உலக நாடுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அந்நாட்டையும் விட்டு வைக்காத நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.