ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் ஜெகன் மோகன் அதிரடி உத்தரவினை பிரப்பித்தார்.
ஆந்திரா மாநிலத்தில் கோணசீமா என்ற மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவையில் ஓப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. அம்மாவட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என பட்டியலின அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி ஆந்திரப் பிரதேச அரசு கடந்த மே 18ம் தேதி மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. 2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு பரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
முதலில் இப்பெயர் மாற்றத்திற்கு பல எதிர்ப்புகள் தொடர்ந்து இருந்தது இதனால் பல வன்முறைகளும் போராட்டங்களும் நிகழ்தது இதன் ஓரு பகுதியாக பல அரசு வாகனங்கள் முதல் பல இடங்கள் தீக்கி இரையாகின. பலத்த போலிஸ் பாதுகாப்பும் 144 தடை உத்தரவும் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கோணசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஜெகன் மோகன் அரசு அதிரடி காட்டியுள்ளது.