அனுஷ்கா: அனுஷ்கா ஷெட்டி பாகுபலியில் தேவசேனையாக நடித்த பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதற்கு பின்பு அவர் உடல் எடை மிகவும் அதிகரித்ததால் படங்களில் நடிக்கவில்லை. தற்போது அவர் 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தின் கதையில் அவர் ஷெஃப்பாகவும், இன்னொரு கதையில் அவர் காமடி கேரக்டரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஏன் இன்னும் பாலிவுட்டில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் விளக்கமிளத்துள்ளார்.
‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. தற்போது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சொன்னார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் ‘சூர்யாவும் நானும் தமிழில் நடித்த ‘சிங்கம்’ படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்தார். அப்படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு முன்பு என்னை அணுகினர். ஆனால் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட சிறய பிரச்சினை காரணமாக அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. பிறகு என்னைத் தேடி வந்த சில இந்தி பட வாய்ப்புகள் எனது இமேஜீக்கு பொருத்தமாக இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டேன். தற்போது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’ என்று அவர் கூறினார்.