கனடாவில் உள்ள மார்க்கம் நகரத் தெருவிற்கு இசைப்புயலின் பெயரான ஏ.ஆர்.ரகுமானை வைத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த செயல் அவரை கெளரவி்க்கும் வைக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் கனடா நாட்டில் உள்ள ஒரு நகரத்தின் தெருக்களுக்கு பெயராக வைக்கப்பட்டு இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரகுமான் அவர்களுக்கு இந்தியா மட்டும் அல்லாது உலக முழுவதிலும் ரசிகர்கள் உள்ளது என்பதற்கு இதுவே ஆதாரம். அவர்கள் எந்த அளவிற்கு ஏ.ஆர். ரகுமானின் இசையை கவனித்தும் ரசித்து இருப்பார்கள்.
கோப்ரா படத்துக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசை ஆட்சி தான் என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் என வரிசையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பெரிய படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. முன்னதாக இரவின் நிழல் திரைப்படத்திலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை ரசிகர்களை கவர்ந்திழுத்தது.

கனடா நாட்டின் மர்காம் நகரின் தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் சூட்டுவது இது முதல் முறை அல்ல என்றும், ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு அல்லா ரக்கா ரஹ்மான் என ஏ.ஆர். ரஹ்மான் பெயரை ஒரு தெருவுக்கு சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது இரண்டாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு கனடாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
வரும் செப்டம்பர் 2ம் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற விருக்கிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரகுமான் பல விருதுகளை பெற்றவர் என்ற போதிலும் இதுவும் ஓரு சிறந்த பரிசாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.