தேசிய கட்சி அந்தஸ்த்தைப் பெற்ற அரவிந்த் கெஜிரிவாலின் ஆம் ஆத்மி

0
2

தேசிய கட்சி அந்தஸ்த்தை பெற்ற அரவிந்த் கெஜிரிவாலின் ஆம் ஆத்மி. ஆம் அத்மி கட்சி (சாதாரண மனிதனின் கட்சி) என்ற பெயரில் 2012 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜிரிவாலால் நவம்பர் 26ந் தேதி டெல்லியில் தொடங்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரேவுடன் இணைந்து ஜன் லோக்பால் மசோதாவை கோரி போராட்டம் நட்த்தியது. இதில் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா என்னு இயக்கத்தை அரசியலாக்க அரவிந்த் கெஜிரிவால் முற்பட்டார். இந்த ஆம் ஆத்மி கட்சி உருவானது முதல் ஊழலுக்கு எதிராகவும் மக்கள் நலனுக்காவும் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுப்பட்டது. இதனை தொடர்ந்து முதன் முறையாக 2013ம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவையில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

தற்போது, தேசிய கட்சி அந்தஸ்த்தை பெற்றுள்ளது. தேசிய கட்சி அந்தஸ்த்தைப் பெற 4 மாநிலங்களில் 6 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சி செய்து வருகிறது.

தேசிய கட்சி அந்தஸ்த்தைப் பெற்ற அரவிந்த் கெஜிரிவாலின் ஆம் ஆத்மி

கோவா சட்டப் பேரவை தேர்தலில் 6.33 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. நடந்து முடிந்துள்ள குஜராத் தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று 13.% வாக்குகளையும் பெற்றதால் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் புதிய சகாப்தத்தை பதிவு செய்துள்ளது. இதை முன்னிட்டு அரவிந்த் கெஜிரிவால் ஆம் ஆத்மி கட்சியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றார்.

இதையும் படியுங்கள்: உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் நிர்மலா சீத்தாராமன்

இந்தியாவில் தற்போது பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் தேசிய கட்சிகள் அந்தஸ்த்தில் உள்ளன. இதில் புதியதாக ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here