நடிகர் ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ப்பட்டுள்ளது.
ஆர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன்’. டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் கன்னட நடிகை காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது.
டி இமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகின்றனர்.தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஓன்று வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன் படி இப்படத்தின் ட்ரைலர் வருகிற 22-ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. இதனை ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டரில் மான்ஸ்டருடன் மோத ரெடியாக இருப்பது போல் ஆர்யா நிற்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சக்தி சௌந்தர்ராஜன் படங்கள் என்றாலே புதுமையான களமாகத் தான் இருக்கும். நாய், ஜாம்பி, லைவ் அனிமேஷன் உள்ளிட்ட பல புதுமையான முயற்சியை அவர் எடுத்துள்ளார். தற்போது கேப்டன் படத்தின் போஸ்டர்களைப் பார்க்கும் போது இந்த முறை அவர் மான்ஸ்டர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.