ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று விளையாட அனுமதி வழங்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியும் இந்தியா வந்து விளையாட அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடர் வரும் நாட்களில் தொடங்கவுள்ளது. வருகின்ற 23ம் தேதி இந்தியாவின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆசிய கோப்பைக்கான போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.
இந்த போட்டிகளில் இந்திய பங்கேற்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது. ஆனால், அதன் முழு அதிகாரமும் இந்திய அரசை சாரும் என்பதால் அப்போது தான் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு 2023ம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்துவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி மிகுந்த பலத்துடன் விளையாடி வருகிறது. உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை வென்றது. இந்தியா மேற்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தயா போராடி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்க ஓன்றாக உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் போட்டிகள் என்றாலே அரங்கம் அதிரும் அந்த அளவிற்கு ரசிகர்கள் கூடுவார்கள் அது எந்த நாட்டில் நடந்தாலும் சரி. அந்த அளவிற்கு இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். தற்போது ஐசிசிஐ அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கு கொள்ள அனுமதி அளித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.