அவதார் 2 உலகம் முழுவதும் 52 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியாகிறது

0
2

அவதார் 2 உலகம் முழுவதும் 52 ஆயிரம் ஸ்கிரீன்களில் நாளை 16ல் வெளியாகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவுகள் மூலம் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் கேம்ரூன் தயாரிப்பில் அதிக பொருட்ச் செலவில் புதிய தொழில் நுட்ப முறையில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அவதார் திரைப்படம் வெளியாகியது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக அடுத்தடுத்த பாகங்களை தயாரிக்க கேம்ரூன் முற்பட்டார்.

இந்த படத்தின் டீசர் கடந்த மே மாதம் வெளியாகி 24 மணி நேரத்தில் 148 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. கிராபிக்ஸ் காட்சிகள் இவை என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

அவதார் 2 உலகம் முழுவதும் 52 ஆயிரம் ஸ்கிரின்களில் வெளியாகிறது

அவதார் தொடரின் மூன்றாவது படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என்றும், நான்காவது பாகம் 2026ம் ஆண்டு, ஐந்தாம் பாகம் 2028ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படத்தில், டைட்டானிக் படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் என பலரும் அதில் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 160 மொழிகளில் டிசம்பர் மாதம் 16ந் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நாளை உலகம் முழுவதும் 52 ஆயிரம் ஸ்கிரின்களில் ஓளிப்பரப்பட உள்ளது. இதற்கு முன்னர் அவேஞ்சர்ஸ் என்ட்கேம் படம் தான் அதிக ஸ்கிரீன்களில் ஓளிப்பரப்பாகியது. தற்போது இப்படம் அந்த சாதனையை உடைக்க காத்திருக்கிறது. மேலும், முன்பதிவு மூலமும் வசூலிலுல் உலக அளவில் பெரும் சாதனை நிகழ்த்தி வருகிறது.

இதையும் படியுங்கள்: ரஜினியின் முத்து வசூல் சாதனையை முந்திய RRR திரைப்படம்

இந்த அவதார் 2ம் பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here