வாழைப்பழ வகைகள் மற்றும் அதன் நன்மைகளும்

0
9

வாழைப்பழ வகைகள் மற்றும் அதன் நன்மைகளும்: வாழை மரத்திலிருந்து இயற்கையாக கிடைக்கும் வாழைப்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். எவ்வித உடல் உபாதைகளையும் வாழைப்பழம் தராது நன்மைகளையே அள்ளி தரும் இயற்கை தந்த கொடையாகும்.

நம் முன்னோர்கள் முக்கனிகளை உண்டு வாழ்ந்து வந்துள்ள செய்திகளை நாம் அறிந்ததே. முக்கனிகள் எனப்படுவது மா, பலா, வாழை இதில் இறுதியாக இருக்கும் வாழை உடலுக்கு மிகுந்த நன்மையை தரவல்லது. வாழைப்பழங்களில் பல வகைகள் உள்ளன. இந்த பதிவில் வாழையின் வகைகளையும் அதன் நன்மைகளையும் அறியலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: செவ்வாழையின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்களை அறிவோம்

வாழைப்பழ வகைகள் மற்றும் அதன் நன்மைகளும்
வாழைப்பழத்தின் பெயர்நன்மைகள்
மொந்தன் வாழைப்பழம்உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும், மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவுகிறது
ரஸ்தாலி வாழைப்பழம்வயிற்று போக்கை குணப்படுத்த உதவுகிறது.
பூவம் வாழைப்பழம்ஜிரண சக்திக்கு உதவுகிறது. இரத்த அதிகரிக்க உதவுகிறது
பேயன் வாழைப்பழம்வயிற்றில் உள்ள குடற்புண்ணை சரிசெய்கிறது. உடல் சூட்டை குறைக்கிறது.
கற்பூரவல்லி வாழைப்பழம்மூளை வளர்ச்சிக்கும், தோலில் ஏற்படும் புண்களை சரி செய்யவும் உதவுகிறது
நேந்திர வாழைப்பழம்இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது.
கதளி வாழைப்பழம்செல்களின் தசைகளை சீராக்க உதவுகிறது
செவ்வாழைப்பழம்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது
எலச்சி வாழைப்பழம்மலச்சிக்கலை சரி செய்கிறது
பச்சைநாடா வாழைப்பழம்இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.
மலை வாழைஉடல் வலிமை பெறும்.

வாழைப்பழங்கள் இயற்கையாகவே நன்மைகளை அள்ளி தரக் கூடியது. எதையும் அளவுடன் சாப்பிட்டால் நன்மையே தினம் ஓரு வாழைப்பழம் எடுத்து கொள்வது நன்மை. அதிலும் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோயாளிகள் மருத்துவரின் அறிவுரை இன்றி வாழைப்பழங்களை சாப்பிட கூடாது.

இது போன்ற தகவல்களையும் ஆன்மீகம், ஜோதிடம், உடல்நலம், கல்வி, தமிழ், சமையல், தொழில் நுட்பம், செய்திகள் போன்ற எண்ணற்ற தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை அணுகி பயன் பெறுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here