சொல்லியதை செய்து காட்டிய வங்கதேச அணி இந்தியாவை எளிதாக வென்று அசத்தியது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை எங்கள் மண்ணில் வென்று காட்டுவோம் என்று வங்கதேச அணியினர் கூறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. அதில் திறமையான விளையாட்டின் மூலம் இங்கிலாந்து அணி கோப்பையை வென்று அசத்தியது. அந்த போட்டியில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று தோல்வியுற்று திரும்பியது. அதற்கு பின் நியூசிலாந்து மண்ணிற்கு சென்று போட்டிளில் கலந்து கொண்டு தோல்வியுற்றும் வென்றும் வந்தது.
தற்போது, வங்கதேசத்திற்கு சென்றுள்ள இந்திய அணி 3 ஓருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்கின்றன. அதில் முதலாவது ஓருநாள் போட்டி நேற்று டாக்காவில் தொடங்கியது. முதலாவதாக டாஸை வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் ஓப்பனர்களாக களம் இறங்கிய ரோஹூத் 27 ரன்களையும் மற்றும் விராட் கோலி 9 ரன்களையும் பெற்றிருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர். ஸ்ரேயாஸ் 24 ரன்களையும் கைப்பற்றினார். மிடில் ஆடரில் களம் இறங்கிய ராகுல் நிதானமாக விளையாடி 73 ரன்களை எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி 41 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இறுதியாக 186 ரன்களை எடுத்திருந்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக அல்ஹாசன் 5 விக்கெட்டுகளையும் ஹாசின் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். 187 ரன்களை வெற்றி இலக்காக களம் இறங்கிய வங்கதேச அணி வீரர்களில் தாஸ் மட்டுமே நிலைத்து நின்று 41 ரன்களை சேர்த்திருந்தார். மீதமுள்ளவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தடுமாறிய போது மெஹந்தி ஹசன், கடைசி விக்கெட்டுக்கு முஸ்தாபிருடன் கூட்டணி அமைத்தார்.
இருவரும் கடைசி வரை விக்கெட் இழக்காமல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேச அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 46 வது ஓவர் முடிவில் 9 விக்கெட் முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி, தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை எங்கள் மண்ணில் வீழ்த்துவோம் என சொல்லியதை, இன்றைய போட்டியில் செய்து காட்டிவிட்டனர்.
இதையும் படியுங்கள்: IPL Auction: ஏலத்தில் வீரர்களின் அடிப்படை தொகை குறித்த தகவல் வெளியீடு
வெற்றி இலக்கை எட்டியவுடன் வங்கதேச அணி வீரர்கள் மைதானத்தில் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என வங்கதேச அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக சீராஜ் 3 விக்கெட்டையும் குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.
இது போன்ற செய்திகளை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.