பீர் குடித்தால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வராது புதிய ஆராய்ச்சியின் தகவல்.
சமீப காலங்களில் பெருகி வரும் மக்களின் அனைத்து விதமான பண்டிகைகள் மற்றும் இன்பதுன்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் மது இல்லாத விருந்து என்பது இல்லாமல் இருப்பதில்லை. இது ஓரு நாகரீக கலாச்சாரமாக மாறியும் உள்ளது. இதனால், மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்து வருகிறது.
‘மது வீ்ட்டிற்கும் நாட்டிற்கும் கேடு‘ என வாசகங்கள் மக்களின் பார்வைகளிலும் மது பாட்டில்களிலும் இருந்தாலும் அதை யாரும் கண்டுக் கொள்வதில்லை. விழிப்புணர்வு இருந்தும் மக்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், பீர் குடித்தால் சர்க்கரை நோய் மற்றும் இதயம சார்ந்த நோய்கள் வருவதில்லை என ஐரோப்பிய நாட்டில் போர்ச்சுக்கலில் இயங்கி வரும் சுகாதார மையம் ஓர் ஆய்வினை நிகழ்த்தியது. அதில் கலந்து கொள்ள 23 வயது முதல் 58 வரையிலானர்களுக்கு 330 மீ.லி. பீர் வழங்கப்பட்டது. நான்கு வாரத்திற்கு பின், அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் நுண்ணுயிரி செயல்பாடு அதிகரித்திருந்தது.
இது நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது என தெரிய வந்தது. மேலும், ஆல்கஹால் இல்லாத பீர் குடிப்பதால் மட்டுமே நுண்ணுயிரி செயல்பாடு அதிகரிக்கிறது. மாறாக ஆல்கஹால் கலந்த BEER குடித்தால் உடல்நிலை பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறது ஆய்வு.
ஆல்கஹால் இல்லாத BEER குடித்தால் கொழுப்பு சேராது மற்றும் உடல் எடை கூடாது, அதே நேரத்தில் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத் தன்மை அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது.