சர்வதேச தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் 94 வயதான மூதாட்டி

0
4

சர்வதேச தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் 94 வயதான மூதாட்டியான பகவானி தேவி தாகர்.

ஹரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, என்ற 94 வயதான மூதாட்டி உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், இரண்டு வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனைப் புரிய வயது ஓரு தடையில்லை என்பதையும் முயற்சி பயிற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்.

பின்லாந்து நாட்டின் டம்பேர் என்னும் இடத்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட பகவானி தேவி தாகர் அதில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர், இலக்கை 24.74 வினாடிகளில் ஓடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அது மட்டும் அல்லாமல் ஷாட் புட்-போட்டியில் கலந்துகொண்ட இவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்திருக்கிறது.

சர்வதேச தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் 94 வயதான மூதாட்டி
சர்வதேச தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் 94 வயதான மூதாட்டி

சென்னையில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் பகவானி தேவி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக விளையாட தகுதி பெற்றார்.

சென்னையில் நடந்த போட்டிக்கு முன்னதாக, டெல்லி மாநில தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஸ்பிர்ண்ட் ஓட்டம், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது இம்மூதாட்டியின் விடமுயற்சியானது நம்பிக்கையுடன் தான் செய்யும் செயலை முழுமனதாக ஏற்று முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை குறிப்பிடுவதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here