BIGG BOSS 6: விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகின்றது. இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6 வது சீசன் தொடங்கி நடந்து வருகிறது. முதல் சீசன் தொடங்கி இந்த ஆறாவது சீசன் வரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் உலக நாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைய இவரும் மிக முக்கிய காரணமாக இருக்கின்றார். அவர் பேசும் தமிழ் உரையாடல் பங்கு கொண்டிருக்கும் ஹஸ்மெட்டுகளை திட்டும் விதத்திலும் பிரபலம் அடைந்தவராக இந்நிகழ்ச்சியில் இருந்து வருகிறார்.
இந்த வாரம் நாமினேட்டில் ராம் பெயர் வந்ததும் நான் இந்த வாரம் வெளியேறிடுவேன் என்று அவரே கூறி வந்தார். அப்படி இருந்தாலும் போன வாரம் போகும் போதே கமல் இரண்டு பேர் இந்த வாரம் எலிமினேட் ஆக இருக்கின்றீ்ர்கள் என்று கூறியுள்ளார். எனவே இன்னொருவர் யாராக இருக்கும் என ரசிகர்களும் ஹஸ்மெட்சும் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த வார நாமினேட் பட்டியலில் ஆயிஷா, ராம், கதிரவன், அசீம், ஜனனி, ஏடிகே இருப்பவர்கள். ரூம் மெட்ஸ் எப்படியாவது அசிமை வெளியேற்றி விடலாம் என்று வாரவாரம் நாமினேட் செய்து வருகின்றனர். ஆனால், அவரோ சாதூரியமாக செயல்பட்டு ரசிகர்களின் ஓட்டுகளை பெற்று வெளியேறாமல் சேபாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தினி, ஷிவின், ரச்சிதா, தனலட்சுமி சேப்பாகி ஜாலியாக ஹஸ்மெட் வீட்டில் வலம் வருகின்றனர். நாமினேடில் இடம் பெற்றவுடனே கதிரவன் மைக்கேல் ஜாக்சன் வேடம் அணிந்து பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதில் அதிக வாக்குகளை பெற தன் திறமைகளை வெளிக் கொணர்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: IMDB 2022: தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் தனுஷ்
குறைந்த வாக்குகளை பெற்றுள்ள ஆயிஷா, ராம், ஏடிகே இவர்களில் ஆயிஷா மற்றும் ராம் வெளியேறுவார்கள் என பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.