BIGG BOSS 6: பிக்பாஸ் சீசன் 6ல் முதலாவது நாமினேஷனில் பிரபல யூடியூப்பாளர் ஜி.பி.முத்து குவின்ஸியை நாமினேட் செய்துள்ளார்.
விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிக பிரபலம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மக்களின் பேராதரவில் ஆறாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. கடந்த 9ம் தேதி தொடங்கிய சீசன் ஆறில் மொத்தம் 20 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பம் முதலே அதகளப்படுத்தும் வண்ணம் ஜி.பி.முத்து டிரன்டிங்கிலேயே இருந்து வந்தார்.
உலக நாயனுக்கும் முத்துவை பிடித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு காமெடி மற்றும் சிறப்பான பிரபாமன்ஸ் செய்து வருகின்றார். முதல் நபராக பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பபட்ட ஜி.பி.முத்து கதிகலங்கினார். தனியாக என்ன செய் என்றும் பயமாக உள்ளது என்றும் ஏக வசனங்களை தன் வட்டார மொழியிலும் தன் இயல்பான நடவடிக்கையாலும் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

கமல் ஆதாம் பற்றி கூறிய போது ஆதாமா யார் என்று கேட்டு அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். ரசிகர்கள் அனைவரும் முத்துவை பற்றி பேசும் அளவிற்கு தன் கள்ளமில்லா பேச்சில் கவர்ந்தார். அதற்கு அடுத்த ஜனனியை அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்நிலையில், நாமினேட் செய்ய பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
இது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஆயிஷாவின் பெயரை தெரிவித்துள்ளார் ராபர்ட் மாஸ்டர். குவின்ஸியை நாமினேட் செய்திருக்கிறார் ஜி.பி. முத்து. தனக்கென்று இரண்டு, மூன்று பேரை வைத்துக் கொண்டு அவர்களிடம் மட்டுமே பேசுகிறார் குவின்ஸி என்கிறார் ஜி.பி. முத்து.
ரச்சிதாவை நாமினேட் செய்துள்ளார் குவின்ஸி. ரச்சிதாவுக்கு இன்னொரு முகம் இருக்கிறது அதை அவர் இன்னும் காட்டவில்லை என்று தோன்றுகிறது என தெரிவித்துள்ளார் குவின்ஸி.
இன்னும் பல தகவல்களும் காமெடிகளும் சண்டைகளும் பிக்பாஸ் வீட்டில் நடக்க தான் போகிறது. அதனை நாமும் பார்த்து மகிழதான் போகிறோம். வரும் வாரங்களில் யார் எலிமினேட் ஆவார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.