Bigg Boss 6 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட குயின்சியின் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய முழுவிவரம் தெரியவந்துள்ளது. இந்த பிக்பாஸ் தொடர் 50 நாட்களை கடந்துள்ள போதிலும் இது வரை எவ்வித வேலையும் செய்யாமல் ஜாலியாக வலம் வந்தவர் குயின்சி இதுவே அவர் இந்த வாரம் எலிமினேட் ஆனதற்கு மிக முக்கிய காரணமாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
விஜய் டிவியில் ஓளிப்பரப்படும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் தொடருக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன் வரை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதலே தொகுப்பாளராக உலக நாயகன் கமல் இருந்து தன் பணியை செய்து வருகிறார்.
இந்த சீசனில் மொத்தம் 20 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஓயில்டு கார்டு என்டரியாக மைனா நந்தினி உள்ளே சென்றார். ஓவ்வொரு வாரமும் ரசிகர்கள் தரும் ஓட்டின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஈடுபடுவர் குறைந்த வாக்குகளை பெறும் நபர்கள் ஓவ்வொரு வாரமும் ஓருவர் அல்லது இருவர் வெளியேற்றப்படுவர்.

இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக தானே வெளியேறுவதாக கூறி ஜி.பி.முத்து வெளியேறினார். பின்னர், அசல்கோலார், நிவாஷினி, ஷெரினா, மகேஸ்வரி, மெட்டிஓலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் தற்போது குயின்சி என ரசிகர்களால் குறைந்த வாக்குகளை பெற்ற நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த வாரத்திற்கான கேப்டனாக அசீம் தேர்வாகி இருந்தார், அத்துடன் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: வெளியேறிய ராபர்ட் மாஸ்டரின் சம்பளம் இவளவா?
தற்போது வீட்டில் இருந்து வெளியேறியுள்ள குயின்ஸி ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 11 லட்சம் வரை சம்பளமாக பெற்றிருக்க கூடும் எனத் தகவல்கள் வந்துள்ளது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.