இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ள படத்தில் G.P. முத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆஃப் ஸ்ப்பின்னரான ஹர்பஜன் சிங் பலமுறை இந்திய அணிக்கு மிகபெரும் பலமாக இருந்துள்ளார். ஐபிஎல்லில் சென்னை அணிக்காக களம் இறங்கி பல விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவி பெற்றுள்ள ஹர்பஜன் தமிழ் படங்களில் நடித்து வருகின்றார்.
சென்னை அணிக்காக விளையாடிய போது ரசிகர்களின் பேராதரவால் ஈர்க்கப்பட்டு தமிழில் பேசியும் தமிழில் டிவிட் போட்டும் திருக்குறள் பற்றி டிவிட் போட்டும் தமிழக மக்களின் ரசிகராக மாறிவிட்டார். இந்த நிலையில், இவர் தமிழ் திரைப்படம் ஓன்றில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஃப்ரென்ஷிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி நடிப்பில் தன் ஆர்வத்தை வளர்த்தும் அடுத்த படத்திலும் நடித்தும் வருகின்றார். அதில் லாஸ்லியா, அர்ஜுன் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
தற்போது, ஃப்ரென்ஷிப் படத்தை இயக்கிய ஜான் பால் இயக்குகின்றார். இந்த படத்தின் 70 சதவீத பணிகள் முடுந்துள்ளதாகவும் தெரிகின்றது. இந்த படம் த்ரில்லர் கலந்த காமெடி படமாக கதை அம்சம் கொண்டுள்ளது. ஹர்பஜனுக்கு ஜோடியாக பிக்பாஸ் ஓவியா நடிக்கிறார். இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஜி.பி முத்துவும் நடித்துள்ளதாக தெரிகின்றது.
இந்நிலையில், பிக் பாஸில் களம் இறங்கியுள்ள ஜி.பி.முத்து அங்கு சரியான எண்டர்டைமண்டாக கலக்கி வருகிறார். அனைவரிடமும் சிறப்பான முறையில் பழகுகிறார். டாஸ்க்குகளையும் நல்ல முறையில் முடித்து வருகின்றார். அவரின் வெள்ளந்தியான பேச்சு அனைவரையும் கவர்ந்து வருகின்றார்.