பிக்பாஸ் சீசன் 6: அனைவரது மனதையும் கவர்ந்த விக்ரமன்

0
7

பிக்பாஸ் சீசன் 6: விஜய் டிவியில் மிக பிரபலம் அடைந்த நிகழ்ச்சி என்றால் குக்வித் கோமாளி மற்றொன்று பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்து 6வது சீசன் தொடங்கி 20 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல நாட்களுக்கு பிறகு வரவேண்டிய பிரச்சனைகள் சண்டைகள் முன்னதாகவே வந்து விட்டது என்று கூறியிருந்தார் நடிகர் கமல்.

தினமும் எதாவது பிரச்சனைகளும் சண்டைகளும் இருந்து கொண்டு தான் உள்ளது. அது ஓருபக்கம் இருக்கட்டும் பிக்பாஸ் வேறு அப்போ அப்போது டாஸ்க் நடத்தப்படுகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து தன் பிள்ளைகளை காண வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.

பிக்பாஸ் சீசன் 6: அனைவரது மனதையும் கவர்ந்த விக்ரமன்

அடுத்த வாரம் தடவல் மன்னனாக இருந்து வந்த அசல் கோலாரை பிக்பாஸ் வெளியேற்றினார். இந்நிலையில், இன்று நடந்த டாஸ்க்கில் விக்ரமன் டீமிற்கு வழங்கப்பட்ட டாஸ்க்கில் வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்து உள்ளார். டிவி சேனல் சார்ந்த அந்த டாஸ்கில் ஓரு ஸ்கிரிப்பிடில் நடிக்க வேண்டும் அதற்கு விக்ரமன் ஸ்கிரிப்ட் எழுதி அதில் நன்றாக நடித்தும் உள்ளார்.

அதாவது, துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையை இந்த டாஸ்கின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். விக்ரமன் ஓரு துப்புரவு தொழிலாளி அவர் ஓரு வீட்டிற்கு சாக்கடை சுத்தம் செய்ய செல்கிறார். அப்போது அடைப்பு ஏற்பட்ட இடத்தை ஓரு கம்பால் குப்பைகளை இடறி வெளியேற்றுகிறார். ஆனால், தண்ணீர் வெளியேறவில்லை. அதனால், என்ன அடைப்பு இருக்கிறது என்று அந்த சாக்கடைக்குள் இறங்கி பார்க்கிறார் அந்த இடத்தில் மூச்சு முட்டி மூச்சு விடமுடியாமல் திணறி இறந்து விடுகிறார்.

அதனை பார்த்து அவர் மகனான அமுதவாணன் தந்தை இறந்தை கண்டு வருந்தி அழுகிறார். இந்த ஸ்கிரிப்ட் அனைவரையும் கவர்ந்தது. துப்புரவு தொழிலாளியை அது போன்ற வேலைக்கு ஈடுப்படுத்த கூடாது. அது போன்ற வேலைக்கு மிஷினை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து சமூகத்தில் இது போன்ற துயரம் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த ஸ்கிரிப்டை தயார் செய்ததாக கூறி அனைவரையும் கவர்ந்து உள்ளார் விக்ரமன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here