Blind T20 World Cup final: இந்தியா கோப்பையை வென்று அசத்தல்

0
2

Blind T20 World Cup final: பார்வையற்றோருக்கான மாற்றுத்திறனாளிகள் சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா ஹார்ட்டிக் வெற்றியை பதிவு செய்து இந்திய நாட்டிற்கு பெருமையை தந்துள்ளது.

நான்கு ஆண்டுக்கு ஓருமுறை நடக்கும் பார்வை குறைபாடு உடையவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற்றது. இதில் பங்கு கொண்ட வங்கதேச அணியும் இந்திய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டிகள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து வங்கதேச அணிக்கு 278 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன் பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Blind T20 World Cup final: இந்தியா கோப்பையை வென்று அசத்தல்

இதன் காரணமாக 120 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்திய அணி பெற்றதன் மூலம் தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னர் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடரில், இதுவரை இந்திய அணி 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ந்து இரண்டுமுறை வென்று நடப்புச்சாம்பியனாக உள்ளது. மேலும், 2024ஆம் உலகக்கோப்பை போட்டித் தொடரையும் இந்தியா தான் நடத்தவுள்ளது. 1998 முதல் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இதுவரை, தென் ஆப்ரிக்க அணி ஒரு முறையும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் இந்திய அணி இரண்டு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: புரோ கபடி 2022: கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here