சென்னை தினம் கொண்டாட்டத்திற்கு தயாராகும் பெசன்ட் நகர் பீச்

0
29

சென்னை தினம் இந்த ஆண்டுடன் 383 வது வருடமாக கொண்டாட தயாராகிறது பெசன்ட் நகர் பீச். கலை நிகழ்ச்சிகள் ஏராலாமான போட்டிகள் என கலைக்கட்ட காத்திருக்கிறது சென்னை வாழ் மக்களுக்காக இன்றும் நாளையும்.

சென்னை நகரம் பிறந்த தினமான ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக, பெசன்ட் நகர் கடற்கரையில் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு 383 வது சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சென்னை தினம் கொண்டாட்டத்திற்கு தயாராகும் பெசன்ட் நகர் பீச்

இதனை ஓட்டி சனிக்கிழமையான இன்று மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை என இரண்டு நாட்கள் சென்னை தினம் கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதற்காக பல முன்னோர்பாடுகளை செய்து வருகிறது சென்னை மாநகராட்சி.

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கான ஓவியப்போட்டி, சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டி, புகைப்பட போட்டி, குறும்பட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓவிய போட்டிக்கான தலைப்பாக தேசியக்கொடி அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பட போட்டிக்கான தலைப்பாக சென்னையின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த புகைப்படம் சென்னை மாநகராட்சி சார்பில் சோசியல் மீடியா பக்கங்களில் பகிரப்படும்.

தொடர்ந்து சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டிக்கான தலைப்பாக சென்னையின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சிறந்த ரீல்ஸ்க்கு பரிசும் மேலும் சென்னை மாநகராட்சி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும். மேலும் குறும்படத்திற்கான தலைப்பு சென்னை என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here