சென்னைக்கு நிறைய சம்பவங்கள் செய்ய போகிறோம்-முதல்வர்

0
6

சென்னைக்கு நிறைய சம்பவங்கள் செய்ய போகிறோம் காத்திருங்கள் என டிவிட் செய்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நீங்கள் எதிர்பார்க்கும் நிறைய சம்பவங்கள் செய்ய போகிறோம் காத்திருங்கள் நவீன சென்னையை வடிவமைப்பதில் மேயராக இருந்த என் பங்கும் இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சி. பிரிட்டிஷ்காரர்கள் வடிவமைத்த மெட்ராசை சென்னை ஆக்கியவர் கலைஞர். திராவிட மாடல் ஆட்சி காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஓரு ரோல் மாடல் எனவும் கூறியுள்ளார் முதல்வர்.

சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சாதித்துள்ளது. எத்தனையோ இயற்கை இடர்பாடுகளை சந்தித்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு விடும் சென்னை மாநகரம். சுனாமியோ, பெருவெள்ளமோ, புயல் மழையோ எதையும் சமாளித்து விடுவார்கள் சென்னை மாநகர மக்கள்.

சென்னைக்கு நிறைய சம்பவங்கள் செய்ய போகிறோம்-முதல்வர்

இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

கொட்டித்தீர்த்த கனமழையிலும் பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. மழையில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டன.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here