சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். லைக்கா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாயை செலுத்தாது தொடர்பான வழக்கின் காரணத்தினால் இப்படி ஓரு உத்தரவு.
நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரமாக நடித்து கொண்டு வருபவர். தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உள்ள பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இதனிடையே நடைபெற்ற விசாரணையில் விஷாலின் சொத்து விவரங்கள் அடங்கிய பிராமண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அன்றைய தினமும் நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.