பிள்ளைகளை காக்கும் காவலர்கலாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இருங்கள்-ஸ்டாலின்

0
8

பிள்ளைகளை காக்கும் காவலர்கலாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இருங்கள் என்று தமழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் பாதி ஆசிரியராகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்தால் போதை பொருட்கள் பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கலாம் எனவும் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கவலை அளிக்க கூடிய மனநிலையில் இந்த நிகழ்சியில் நின்று கொண்டு இருக்கிறேன்.

பிள்ளைகளை காக்கும் காவலர்கலாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இருங்கள்-ஸ்டாலின்

தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடும் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் எனக்கு கவலை அளிக்கிறது. அப்போது நடக்காத எந்த முயற்சியும் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கி நடவடிக்கை எடுக்க உதரவிட்டுள்ளேன்.

ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும் எனது காவல் எல்லைக்குள் போதை பொருள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு நீதி மன்றம் அமைக்க உள்ளோம் போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு சைபர் செல் உருவாக்கப்பட உள்ளது.. இந்த விவகாரத்தில் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுவேன் என அதிகாரிகளுக்கு உத்ரவிட்டுள்ளேன்.

போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தனது கடமையை செய்ய தயங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்.போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடபடிக்கை எடுக்க அரசு எந்த விதத்திலும் தயக்கம் காட்டது.

பெற்றோர்கள் பாதி ஆசிரியராகவும் , ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாவும் இருந்தால் போதை பொருள் பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கலாம். மேற்கத்திய நாடுகளில் போதை பொருட்கள் பயன்பாடு குறைந்து, ஆசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. போதை தான் அனைத்து சமூக குற்றங்களுக்கும் தூண்டுதலாக உள்ளது.பெற்றோர்கள் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை போதை பொருட்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற தலதமிழ் இணையதளத்தை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here