இளம் கால்பந்து வீராங்கனை சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
17 வயதே ஆன இளம் கால்பந்து வீராங்கனையாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் பங்கு பெற்று வந்த பிரியா தனது காலில் ஏற்பட்ட ஜவ்வு பிரச்சனை காரணமாக கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டால் போதும் என்று கூறியுள்ளனர். அதனால் பிரியாவின் குடும்பத்தினர் சிகிச்சைக்கு ஓப்புக் கொண்டதன் பேரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை முடிந்த நிலையில் ஓரு தினம் கடந்த நிலையில் கடுமையான வீக்கம் ஏற்பட்டு துடிதுடித்து நிலையில் மறுபடியும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை செய்து முடித்த போது அவருக்கு கட்டு போடப்பட்டது. அந்த கட்டு மிகவும் இறுகலான கட்டாக போட்டதன் காரணமாக ரத்தம் ஓட்டம் தடைபட்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது மேலும் பல நோய்கள் அவரை தொடர்ந்தது சந்தேகம் அடந்த கடும்பத்தார் பிரியாவை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளது அவரின் கால் துண்டிக்கப்பட வேண்டும் இல்லையெனில் உயிருக்கு ஆபத்து என்றனர் அதன் காரணமாக கால் துண்டிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை அளித்து கொண்டு இருக்கும் போதே அவர் இறந்த செய்தியை மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தவறுதலாகவும் அலட்சியத்தாலும் மருத்துவர்கள் செய்த இந்த செயலால் ஓரு உயிர் இம்மண்ணை விட்டு சென்றது. தமிழகம் இளம் கால்பந்து வீராங்கனையை இழந்தது. இதன் காரணத்தை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அந்த இரு மருத்துவரையும் பணியிடை நீக்கம் செய்தார். மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இந்த செய்தியை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த செய்தி மனதிற்கு மிகவம் துயரத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற தவறான மருத்துவ சிகிச்சையால் ஓரு உயிரை இழந்து நிற்கிறோம் என்று வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்
இந்நிலையில், பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது படத்திற்கு பூக்களை வாரி தூவி விட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரணத்தையும் வழங்கினார். உடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் மற்றும் இந்துசமயத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். நிவாரணமாக 10 லட்சம் ரூபாயும் பிரியாவின் சகோதரருக்கு அரசு பணி ஆணையும் தமிழக அரசு சார்பில் வீடும் நிவாராணமாக கொடுக்கப்பட்டது.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தலதமிழ் இசையதளத்தை பின்பற்றுங்கள்.