தெலுங்கில் காட் ஃபாதர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. மலையாளத்தில் நடிகர் ப்ரித்திவி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ‘லூசிஃபர்’ இது அரசியல் கலந்த திரில்லரான படமாக அமைந்து வெகுவான ரசிகர்களை கவர்ந்தது வசூலிலும் பெரும் வெற்றியை தந்தது.
இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.

இப்படத்தின் ரீமெக் பல மொழிகளில் வெளியாகிறது. தற்போது, தெலுங்கில் இப்படம் ரீமெக் ஆகிறது. இதில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கதாநாயகியாக நயன்தாராவும் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் இந்தி படசூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல் தெரிகிறது. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூரி ஜெகநாத் மற்றும் சத்யா தேவ் மற்ற முக்கிய நடிகர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் படம் ரீமேக் செய்யப்படுகிறது. மோகன் ராஜா இயக்கி வருகிறார். தயாரிப்பு நிறுவனம் ஆர் பி செளதிரி மற்றும் என் வி பிரசாத் இணைந்து தயாரிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். சிரஞ்சீவி முதல் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கறுப்பு நிற உடையை அணிந்தபடி, நாற்காலியில் அமர்ந்தபடி முதல் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.
`GOD FATHER இந்த ஆண்டு தசராவிற்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.