கோப்ரா திரைப்படத்தில் வரும் 20 நிமிட காட்சிகளை நீக்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிபபு.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்ட கோப்ரா திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகளை நீக்குவதாக படக்குழு அறிவிப்பு. ரசிகர்கள் மற்றும் மற்ற தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை வந்ததால் படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட படமாக இன்று மாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நாளை மறுதினம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி, மிருணாளினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மொத்தம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 வினாடிகள் ஓடக்கூடிய கோப்ரா படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

படத்தின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் லேக் அடிக்கும் காட்சிகளை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை எடிட்டிங் டேபிள்லயே செஞ்சிருந்தா இன்னேரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும். இடைவேளை காட்சி ட்விஸ்ட், போலீஸ் ஸ்டேஷன் காட்சி இலுஷன் சீன்லாம் வேறலெவல்ல இருந்துச்சு ஒரே நாளில் மாற்றியதற்கு நன்றி இந்த வாரம் முழுக்க படம் ஓடினாலும் கலெக்ஷன் அள்ளிடும் என நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.