மும்பையை பந்தாடிய சென்னை அணி

0
9

மும்பை அணியை பந்தாடியது சென்னை அணி நேற்று நடந்த ஐபிஎல் (IPL) 33 வது போட்டியானது மும்பை டி ஓய் பாட்டீஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய மும்பை அணி சென்னை அணிக்கு 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 156 இலக்கை நிர்ணயித்தது. அந்த இலக்கை சென்னை அணி 20 வது ஓவரில் 7 விக்கெட் இழந்து இறுதி பந்தில் தனது இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

மும்பையை பந்தாடிய சென்னை அணி

MI & CSK ஹைலைட்ஸ் 2022:

நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் மும்மை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரு அணிகளும் போட்டியிட்டன. மும்பை ஆணி இத்தொடரில் ஓரு வெற்றியை கூட பெறாததால் இப்போட்டியில் வென்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிட்டது. இதே போலவே சென்னை அணி ஓரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது ஆகவே கடுமையான போட்டியாக இருந்தது. யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

டாஸை வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசுவதாக முடிவெடுத்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஆட்டகாரா்களாக இறங்கிய ரேகித் சர்மாவும் இஷான் கிஷனும் முதல் ஓவர்களிலேயே முகேஷ் சௌத்திரியிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதற்கடுத்து களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸை 4 ரன்னுடன் ஆட்டமிழக்க செய்தார். அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை பவர் பிளேயில் ரன் சேர்க்க தடுமாறியது.

சிறிது நேரம் விக்கெட் சரிவை தடுத்த சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடியில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரியை துரத்திய சூர்யகுமார் 32 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஹிருத்திக் ஷோக்கீன் 25 ரன்களிலும், பொல்லார்ட் 14 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

இதற்கிடையில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த திலக் வர்மா அரைசதம் விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய அவர் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். அவருடன் மறுமுனையில் இருந்த ஜெய்தேவ் உனத்கட்19 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்தது. இதனால் சென்னனை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்கம் முதல் பந்துவீச்சில் மிரட்டிய சென்னை அணியில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார். 2 பவுண்டரிகளை விரட்டிய மிட்செல் சான்ட்னர் 11 ரன்னில் அவுட் ஆனார். சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளை விரட்டி 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட துபே 13 ரன்னில் அவுட் ஆனார்.

களத்தில் இருந்த அம்பதி ராயுடு – கேப்டன் ஜடேஜா ஜோடியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு 2 பவுண்டரிகள் 3 சிக்ஸரை பறக்க விட்டு 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜடேஜா 3 ரன்னில் அவுட் ஆனார்.

இப்போது சென்னையின் வெற்றிக்கு 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தில் ஏற்கனவே தொற்றி இருந்த பரபரப்பு மீண்டும் உச்சத்திற்கு சென்று இருந்தது. ஆனால், களத்தில் கூலாக இருந்த தோனி உனத்கட் வீசிய லோ-ஃபுல் டாஸ் பந்தை பைன் லெக் திசையில் பவுண்டரி கோட்டிற்கு விரட்டி தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்தார். 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்திய சென்னை அணி வெற்றியை உறுதி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here