காமன் வெல்த் 2022: பேட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் வென்றார்

0
4

காமன் வெல்த் 2022: பேட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மிச்செல் லீ என்ற வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி முதன் முதலாக காமன்வெல்த் தங்கம் வென்றார் பி.வி.சிந்து.

இதற்கு முன் அரையிறுதியில் சிங்கபூரை சேர்ந்த யோ ஜின் மின் என்பவரை 21-19,21-17 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் இறுதி போட்டியில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் வெள்ளி உறுதி என்ற நிலையில் இன்று போட்டியில் விளாயாடினார்.

காமன் வெல்த் 2022: பேட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் வென்றார்

பிறகு மிச்செல் லீ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த 5-5 என்று ஆனது. ஆனால் சிந்து விடாமல் சில அதிரடி ஆட்டங்களை ஆட 9-7 என்று முன்னிலை பெற்று பிறகு 11-8, 14-9 என்று முன்னிலை வகிக்க தொடர்ந்து மோதிய மிச்செல் லீ 5 புள்ளிகளை வெல்ல இருவரும் 17-14 என்று விறுவிறுப்பு காட்டினர். ஆனால் அதன் பிறகு மிச்செல் லீ உடலுக்கு நேராக ஒரு ஸ்மாஷ் செய்ய சிந்து 19-15 என்று வெற்றிக்கு அருகில் வந்து அடுத்து 2 புள்ளிகளை பெற்று 21-15 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.

2வது செட்டில் ஒரு பிரமாதமான ஸ்மாஷுடன் ஆரம்பத்தில் 3-2 என்று சிந்து முன்னிலை வகித்தார். பிறகு மிச்செல் லீ ஒரு ஷாட்டை வைடாக அடிக்க சிந்து 6-3 என்று முன்னிலை பெற்றார். ஆனால் அதன் பிறகு 4 புள்ளிகளை சிந்து பவர்ஃபுல் ஸ்மாஷ், அருமையான எதிர்பார்ப்பு, மற்றும் பிரமாதமான கணிப்புகள் மூலம் மிச்செல் லீயிடமிருந்து ஆட்டத்தைப் பறித்து 10-6 என்று நகர்த்தினார்.

பிறகு ஒரு நீண்ட ரேலியில் 57 ஷாட்களை இருவரும் விடாப்பிடியாக ஆடினாலும் கடைசியில் சிந்துவுக்கே வெற்றி என்ற ஆனபிறகு 13-10 என்று சிந்து முன்னிலை வகித்தார். பிறகும் சிந்து ஆதிக்கம் செலுத்த 17-13, 19-13 என்று முன்னேறி அக்டைசியில் 21-13 என்று 2வது செட்டையும் கைப்பற்றி தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here