காமன் வெல்த் போட்டிகள் 2022: மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய இறுதி போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவி வெள்ளி பதக்கம் வென்றது.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் பல நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்று வெற்றிகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இறுதி போட்டிகளில் மோதின.
இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிக்கொடுத்து தோல்வியை கண்டது. தோல்வி கண்டாலும் இந்தியா வெள்ளி பதக்கத்தை வசமாக்கியது.

மகளிர் இந்திய அணியின் வீரர்கள் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தன் முழுப் பங்கை அளித்து வந்தனர். அதனால் தான் இறுதி போட்டிக்கு அவர்கள் தகுதி பெற்றனர்.
இறுதி போட்டியில் இந்தியா எப்படியும் வெற்றி பெற்று தங்கம் வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் 13 ரன்கள எடுக்க முடியாமல் வீரர்கள் தடுமாறி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் சிக்கிக் கொண்டனர்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி பெத் மூனி (41 பந்துகளில் 61) அரை சதம், இந்தியாவின் பீல்டிங் முயற்சியையும் மீறி ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எட்ட முடிந்தது.
கடைசி ஆறு ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க, 50 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்மன்பிரீத் (43 பந்தில் 65) ஒரு சிறப்பு இன்னிங்ஸின் ஆடியும் அது இந்தியாவுக்கு கைக்கொடுக்கவில்லை.
எவ்வாறாயினும், இந்தியா 32 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. இந்தியாவின் இந்த பேட்டிங் சரிவு 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை நினைவுபடுத்துகிறது.