தனுஷின் வாத்தி திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
2

தனுஷின் வாத்தி திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

நடிகர் தனுஷ் தனது அண்ணன் தயாரிப்பில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தன் நடிப்பின் மூலம் அசத்தி வருகின்றார். இந்நிலையில், கடந்த 4 படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி சரியாக ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறாமல் போனது.

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பான முறையில் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காதல், அன்பு, அதிரடி, குடும்பம் என அனைத்து தளங்களிலும் இயக்குனர் மித்ரன் தனுஷை நடிக்க வைத்திருக்கிறார்.

இதற்கு அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள நானே வருவேன் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வந்தது. எனினும் இன்னும் எந்த தேதியில் என்று உறுதியாக தெரிவிக்கவில்லை. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் வாத்தி திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில், வாத்தி படத்தில் நடித்துள்ள தனுஷ் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதாகவும் சில பணிகள் மட்டும் மீதமுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இப்படத்தின் ரீலிஸ் தேதியை இப்படத்தின் படக்குழு அறிவித்துள்ளது. டிசம்பர் 2ம் தேதி இப்படமானது திரையரக்கிற்கு வரும் என்பது தெரிகிறது.

இந்த படம் இரு மொழிகளில் ஓரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. வாத்தி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here