வாத்தி: நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். இதில் சம்யுக்தா மேனன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், பிரவீனா, இளவரசு, ஸ்ருதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயின்ட் நிறுவனம் பெற்றுள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் அதாவது முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்றும், அந்தப் பாடலை தனுஷ் எழுதியுள்ளதாகவும், அது காதல் பாடலாக உருவாகியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.