2000 கடக்நாத் கோழிகளை வாங்கி குவிக்கும் தல தோனி, இந்தியாவிற்கு தல தோனியின் தலைமையில் உலக கோப்பை கிடைத்தது யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதற்கு முன்னர் கபில்தேவ் ஓரு முறை இந்தியாவிற்கு உலக கோப்பை வாங்கி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் உலகினர், தல தோனியை கூல் கேப்டன் என்றும், தலைக்கனம் சிறிதும் இல்லாதவர் என்றும் அவரை புகழ்கின்றனர். பல கிரிக்கெட் வீரர்கள் அவர்ரவர் காலக்கட்டத்தில் சிறப்பானவராக இருக்கின்றனர். எனினும், தோனி அதிலும் வேறு அனைவராலும் ஆதரிக்கப்படுபவர் மட்டுமின்றி விரும்பப்படுபவராகவும் உள்ளார்.

தோனி அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். ஐபிஎல் லில் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளார். அடுத்த ஆண்டுக்கு ஆடுவாரா என்பது சந்தேகமே.
இதற்கிடையில், அவர் ஓய்வு நேரங்களில் இயற்கை மீது அன்பு கொண்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இப்போது தோனியின் கோரிக்கையின் பேரில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அதிக புரதம் நிறைந்த கடக்நாத் இனத்தைச் சேர்ந்த 2000 கோழிக்குஞ்சுகளை ராஞ்சி பண்ணை வீட்டுக்கு அனுப்பி உள்ளதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த கூட்டுறவு நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற கோழிகளைக் காட்டிலும் கடக்நாத் வகையான கோழியின இறைச்சியில் சத்து அதிகம் என்பதும் அந்தக் கோழிகள் இடும் முட்டைகளில் புரதம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இந்த வகையான கோழிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த கடக்நாத் கோழி வகைகள் நாட்டில் வேறு எங்கும் இல்லை என்பதால் இந்த கோழி வகைகளுக்கு 2018ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. சத்தீஸ்கர் மாநிலம் இந்த கடக்நாத் கோழி தங்களின் பாரம்பரியம் என்று சட்டப்போராட்டம் நடத்திய நிலையில் அதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் வென்றது புவிசார் குறியீடு பெற்றது.
இந்த வகையான கோழிக்குஞ்சுகளை ஆன்லைன் மூலமாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இது பெரிய அளவில் பயனளிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தோனி தற்போது கடக்நாத் வகையான கோழிகளை வாங்கி தனது பண்ணை வீட்டில் அதையும் வளர்க்க உள்ளார்.