மனைவி சாக்ஷியின் கதையை தமிழில் தயாரிக்கும் டோனி

0
2

சாக்ஷி டோனி: தோனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் இவர் ரோர் ஆஃப் தி லயன்ஸ், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் டு ஆகிய சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். தற்போது தோனி தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். அந்த படத்தை அவர் பல மொழிகளில் வெளியிட இருக்கிறார். அந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷி எழுதி இருக்கிறார். அந்த கதையை தோனி 3டி வடிவில் எடுக்க இருக்கிறார். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தோனி தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

sakshi dhoni production company

இது குறித்து தோனியின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக பதிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், எங்களை குறிப்பிட்ட மொழி சார்ந்த நிறுவனம் என அடையாளப்படுத்த விருப்பமில்லை. நம்முடைய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள இந்திய பார்வையாளர்களுக்கு அர்த்தம் உள்ள கதைகளை கொடுக்கும் நோக்கில் இருக்கிறோம். இந்த நிறுவனம் அறிவியல் புனைவு, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் வகையான திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here