ஆர்ஜே. பாலாஜி: ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரன் பேபி ரன்’ அறிமுக விழாவில் ஆர்ஜே. பாலாஜி ரசிகர்களுக்கு கூறிய அட்வைஸ்.
இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். இப்போதுதான் வெளிபடத்தில் நடிக்கிறேன். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் கவனம் செலுத்த மாட்டேன். வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் தான் கதை. இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு த்ரில்லாக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.
இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் சினிமாவிற்கு நேரத்தையும், உழைப்பையும் செலவிடுவதை தவிர்த்து வேறு வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மக்களை இரண்டாக பிரித்து கொம்பு சீவும் வேலைகளை நிறுத்த வேண்டும். சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா, அதையும் கூறுங்கள் கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். அதனால் உங்கள் உயிரை விடும் அளவிற்கு சினிமாவை பார்க்க வேண்டாம் என்று இளைஞர்களுக்கு அவர் அட்வைஸ் கூறினார்.